அல்லாஹ்வுடைய தூதரின் (ஸல்) பின்பற்றாளர்கள் - நாம் தானா?!
பாகம் - 1
- இமாம் முஹம்மது அல்-ஆஸி
- தமிழில்: அபு தர்
முதல்
ஃகுத்பா:
"ஸிராத்துல் முஸ்தக்கீம்"ன் மீது
நிலைபெற்றுள்ள சகோதர, சகோதரிகளே! நமக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த எத்தனையோ சமுதாயங்களையும்
கலாச்சாரங்களையும் சிறிது சிறிதாக சுரண்டி அழிவின் பக்கம் இட்டுச் சென்ற விவகாரங்களில் ஒன்று தான் நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் ஒரு புதிய
வடிவமாக இன்று உருப்பெற்றுள்ளது. இது ‘எண்ணிக்கை’ சம்பந்தப்பட்ட விவகாரமாக இருக்கிறது.
எனினும் மிகுதியான மக்கள் இவ்வழக்கில் ஒருமித்த கருத்துடையோராய் குறிப்பிட்டதொரு நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனரா என்றால் இல்லை! உறுதியான நடவடிக்கையின்பால் களத்திலிறங்கும்
பொருட்டு, குறிப்பிட்டதொரு செயல்திட்டத்தின் அடிப்படையில் முன்னோக்கி நகர வல்ல மிகுதியான ஆதரவாளர்கள் நம்மைச்
சூழவும் இருக்கின்றனரா
என்றால் இல்லை! இத்தகைய
நடத்தை ஒரு சராசரி மனிதனை - நாம் அல்லாஹ்வின்
பிரச்சன்னத்திலே இருப்போமெனில் நம்மிடம் கடுகளவும் இருக்கக்கூடாத – பலவீனமானதொரு மனோவியல்
சட்டகத்திலும் உளவியல் ரீதியான மாற்றத்திலும் கொண்டுபோய் சேர்க்கிறது.
இன்று (முஸ்லிம்) விரோத சக்திகள் பல்வேறு வஞ்சகத் தொழிற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், அவர்கள் தங்கள் மருங்கில் மிகுதியான எண்ணிக்கையைக் கொண்டுள்ளனர். அவர்களது மருங்கில் அல்லாஹ் இல்லை; ஆனால் அபரிமித எண்ணிக்கை இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நம்முடைய மூல முன்மாதிரியாக இருக்கும் காரணத்தால் அவரது பாதையைப் பின்பற்றியே நாம் நமது நடத்தையையும் அசைவுகளையும் அமைத்துக் கொண்டுள்ளதாக கூறுக்கொள்கிறோம். அவர் நமக்குக் கற்றுத் தந்தார்; சிக்கலான பல விடயங்களை விளங்க வைத்தார்; வழியைக் காண்பித்தார்; நாம் - நம்முடைய இச்சூழலில் - மேற்கொள்ள வேண்டிய அதே செயல்பாடுகளையே அடிப்படையில் அவரும் மேற்கொண்டார். ஆதலால் அத்திசையை நோக்கி நம்மை நாம் நகர்த்திச் செல்ல கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையிலிருந்து நாம் ஆரம்பம் செய்யலாம். அவர்களுக்கு அங்கே எத்தனை ஆதரவாளர்கள் இருந்தார்கள்? அப்போதிருந்த ஸ்தாபனங்கள், மேட்டுக்குடிகள் என்று மார்தட்டிக்கொள்கிற சமுதாயத்தின் சிறந்தவர்கள், அதிகாரவர்க்கத்தினர், மதம்சார் படிநிலை அமைப்பு, சராசரி மனிதர் என்று ஏறக்குறைய அனைவருமே அவருக்கெதிராகத்தான் இருந்தனர். மெய்நிகராக எந்தவொரு மனிதருமே தன்னுடனில்லாத ஒரு சூழலில்தான் அவர்கள் (ஸல்) - தன்னுடைய இப்புனிதப் பணியை - ஆரம்பம் செய்தார்கள்.
இன்று (முஸ்லிம்) விரோத சக்திகள் பல்வேறு வஞ்சகத் தொழிற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், அவர்கள் தங்கள் மருங்கில் மிகுதியான எண்ணிக்கையைக் கொண்டுள்ளனர். அவர்களது மருங்கில் அல்லாஹ் இல்லை; ஆனால் அபரிமித எண்ணிக்கை இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நம்முடைய மூல முன்மாதிரியாக இருக்கும் காரணத்தால் அவரது பாதையைப் பின்பற்றியே நாம் நமது நடத்தையையும் அசைவுகளையும் அமைத்துக் கொண்டுள்ளதாக கூறுக்கொள்கிறோம். அவர் நமக்குக் கற்றுத் தந்தார்; சிக்கலான பல விடயங்களை விளங்க வைத்தார்; வழியைக் காண்பித்தார்; நாம் - நம்முடைய இச்சூழலில் - மேற்கொள்ள வேண்டிய அதே செயல்பாடுகளையே அடிப்படையில் அவரும் மேற்கொண்டார். ஆதலால் அத்திசையை நோக்கி நம்மை நாம் நகர்த்திச் செல்ல கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையிலிருந்து நாம் ஆரம்பம் செய்யலாம். அவர்களுக்கு அங்கே எத்தனை ஆதரவாளர்கள் இருந்தார்கள்? அப்போதிருந்த ஸ்தாபனங்கள், மேட்டுக்குடிகள் என்று மார்தட்டிக்கொள்கிற சமுதாயத்தின் சிறந்தவர்கள், அதிகாரவர்க்கத்தினர், மதம்சார் படிநிலை அமைப்பு, சராசரி மனிதர் என்று ஏறக்குறைய அனைவருமே அவருக்கெதிராகத்தான் இருந்தனர். மெய்நிகராக எந்தவொரு மனிதருமே தன்னுடனில்லாத ஒரு சூழலில்தான் அவர்கள் (ஸல்) - தன்னுடைய இப்புனிதப் பணியை - ஆரம்பம் செய்தார்கள்.
தன்னகத்தே நீதியாக நடந்துகொள்ள முற்படுவதோடு
அல்லாஹ்வின் தூதருடனான
(ஸல்) தனது உறவுமுறையினைத் துல்லியமாகப் பேணிக்கொள்ள விரும்பும் மனிதரிடத்தில்
நாம் பின்வரும் கேள்வியைக் கேட்போம். நீங்கள் அன்றைய
கால மக்காவில் வாழ்ந்திருப்பீர்களெனில், மிகுதியான ஆதரவாளர்கள் அவரைச் சூழவும் காணப்படாத; சமுதாயத்தில் எவ்வொரு உயர் பதவிகளையும்
வகித்திடாத; மக்கத்து சமூகத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும்படியான
பகாசுர முடிவுகளை எடுக்குமளவிற்கு செல்வாக்குள்ள மனிதராகவும்
இருந்திராத முற்றிலும் பாதகமான அச்சூழமைவில் நீங்கள் அல்லாஹ்வுடைய தூதரின் ஆதரவாளராக இருக்க விரும்புவீர்களா? இத்தகைய
நிகழ்வுகளின் உரைகல்லிலே நாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவலாக மேலாதிக்கம் செலுத்தி வரும் இன்றைய மனோபாவத்தினை புரிந்து கொள்ள முயற்சிப்போமானால், ஏறக்குறைய முழு உலகுமே அல்லாஹ்வின் தூதருக்கு
(ஸல்) எதிராக இருந்த அத்துவக்க காலகட்டத்தில், இன்றைய முஸ்லிம்களில் விரல் விட்டு எண்ணிவிடும்படியான மிகவும் சொற்பமான அல்லது அதனினும் குறைவானவர்களே அவரது ஆதவாளர்களாக இருந்திருப்பார்கள்.
ஆகையினால், முஹம்மதின் (ஸல்) சுன்னாஹ்வையும் சீறாவையும் பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொள்ளும் பட்சத்தில் நாம் சற்று கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில், நம்மிலே சிலர் இவ்வாக்கியங்களை மிகச் சாதாரணமாகக் கூறிவிடலாம். எனினும், இதன் மூலம் நாம் பொய்யுரைப்போராக இருந்து விடக்கூடும். மேலும், அவரது பதிமூன்று ஆண்டு கால மக்கா வாழ்க்கையின் நெடிய பயணத்திலே மிகுதியான அளவு துன்புறுத்தல்களும், அடுக்கடுக்கான பல்வேறுபட்ட தொந்தரவுகளும், அல்லாஹ்வின் தூதருடனும் அவருடன் பற்றுறுதியோடிருந்த வெகுசில முஸ்லிம்களுடனும் சேர்ந்து ஓரணியாக பிரயாணிக்கலாயின. இத்தகைய துன்புறுத்தல்களும், இடர்ப்பாடுகளும் இன்று நம்முடைய வழியில் வருமானால் நாம் ஏற்றுநடக்கும் நம்முடைய இக்கொள்கையில் இறுதிவரை பற்றுறுதியுடன் நிற்கத் தயாராக உள்ளோமா?
எண்ணிக்கையளவில் கூறுவதென்றால் நம்மிலே மிகுதியான தொகையினர் இறுதிவரை உளவுறுதியுடன் நிற்கப்போவது கிடையாது. மாறாக, எண்ணிக்கையளவிலே அபரிமித தொகையினர் நமக்கெதிராகத்தான் இருப்பர். (முதல் தலைமுறை முஸ்லிம்களின்) அக்காலச் சூழ்நிலைக்கு ஒப்பான அதே நிலைமை தான் நம்மத்தியிலும் இன்று காணக்கிடைக்கின்றது. கொள்கையுறுதியின் அடிப்படையில் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்று நடப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. இவர்களது எண்ணிக்கையை, இஸ்லாத்தின் பெயரிலோ அல்லது குஃப்ரின் பெயரிலோ, இஸ்லாத்திற்கெதிராக வாழ்பவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்து பார்த்தால் பின்னவர்களே மிகைத்தவர்களாக உள்ளனர்.
சமூக அழுத்தங்களும், வெகுஜன மக்களின் கண்களில் நமக்கெதிரான பொய்களையும் இட்டுக்கட்டுதல்களையும் மிகைப்படுத்திக் காட்டும் ஊடகங்களும் மட்டுமே இன்றைய உலகின் குறிப்பிடத்தக்க காரணிகளாக செயலாற்றிடவில்லை. இவைகளுடன் சேர்த்து - இங்கே முஸ்லிம்களுக்கெதிரான - இத்தகைய செயல்பாடுகளில் இராணுவ அழுத்தங்களின் பங்களிப்பும் கூட அளப்பரியதாகவே அமைந்திருக்கிறது. இவைகள் நமது இன்றைய வாழ்வின் யதார்த்த உண்மைகள்.
ஆகையினால், முஹம்மதின் (ஸல்) சுன்னாஹ்வையும் சீறாவையும் பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொள்ளும் பட்சத்தில் நாம் சற்று கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில், நம்மிலே சிலர் இவ்வாக்கியங்களை மிகச் சாதாரணமாகக் கூறிவிடலாம். எனினும், இதன் மூலம் நாம் பொய்யுரைப்போராக இருந்து விடக்கூடும். மேலும், அவரது பதிமூன்று ஆண்டு கால மக்கா வாழ்க்கையின் நெடிய பயணத்திலே மிகுதியான அளவு துன்புறுத்தல்களும், அடுக்கடுக்கான பல்வேறுபட்ட தொந்தரவுகளும், அல்லாஹ்வின் தூதருடனும் அவருடன் பற்றுறுதியோடிருந்த வெகுசில முஸ்லிம்களுடனும் சேர்ந்து ஓரணியாக பிரயாணிக்கலாயின. இத்தகைய துன்புறுத்தல்களும், இடர்ப்பாடுகளும் இன்று நம்முடைய வழியில் வருமானால் நாம் ஏற்றுநடக்கும் நம்முடைய இக்கொள்கையில் இறுதிவரை பற்றுறுதியுடன் நிற்கத் தயாராக உள்ளோமா?
எண்ணிக்கையளவில் கூறுவதென்றால் நம்மிலே மிகுதியான தொகையினர் இறுதிவரை உளவுறுதியுடன் நிற்கப்போவது கிடையாது. மாறாக, எண்ணிக்கையளவிலே அபரிமித தொகையினர் நமக்கெதிராகத்தான் இருப்பர். (முதல் தலைமுறை முஸ்லிம்களின்) அக்காலச் சூழ்நிலைக்கு ஒப்பான அதே நிலைமை தான் நம்மத்தியிலும் இன்று காணக்கிடைக்கின்றது. கொள்கையுறுதியின் அடிப்படையில் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்று நடப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. இவர்களது எண்ணிக்கையை, இஸ்லாத்தின் பெயரிலோ அல்லது குஃப்ரின் பெயரிலோ, இஸ்லாத்திற்கெதிராக வாழ்பவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்து பார்த்தால் பின்னவர்களே மிகைத்தவர்களாக உள்ளனர்.
சமூக அழுத்தங்களும், வெகுஜன மக்களின் கண்களில் நமக்கெதிரான பொய்களையும் இட்டுக்கட்டுதல்களையும் மிகைப்படுத்திக் காட்டும் ஊடகங்களும் மட்டுமே இன்றைய உலகின் குறிப்பிடத்தக்க காரணிகளாக செயலாற்றிடவில்லை. இவைகளுடன் சேர்த்து - இங்கே முஸ்லிம்களுக்கெதிரான - இத்தகைய செயல்பாடுகளில் இராணுவ அழுத்தங்களின் பங்களிப்பும் கூட அளப்பரியதாகவே அமைந்திருக்கிறது. இவைகள் நமது இன்றைய வாழ்வின் யதார்த்த உண்மைகள்.
(இத்தகைய) இராணுவ அழுத்தங்களுக்குக் கீழடங்கிச் செல்லக்கூடியவரா
அல்லாஹ்வின் தூதர்? ஒவ்வொரு பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களிடமிருந்த ஒவ்வொரு இறுதித்துளி பொறுமையையும் பிழிந்தெடுக்கும் வகையிலே பின்நாட்களில் வரவிருந்த இராணுவ ஆண்டுகளுக்கு ஆருடம் கூறும் வண்ணம் மக்காவில் நிலைகொண்டிருந்த (முஃமின்களின்)
அரணமைக்கப்பட்ட மனநிலைக்கு மிகக் கடுமையான போராட்டத்துடனும்
ஜிஹாதுடனும் கூடிய பதிமூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன. இத்தகைய
நிகழ்வுகள் யாவும் நம்மை இன்றைய காலச்சூழலை நோக்கி அழைத்துவர வேண்டும்.
முஸ்லிம்கள் இன்று சூழவும் காணக்கிடைக்கும் எண்ணிக்கையைப் பார்க்கின்றனர். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இஸ்லாத்தை அழித்தொழிக்க வேண்டுமென்று கூறுவதோடு ஓர் அதிரடியான மரண சவால் விட வேண்டிய தருணத்தையும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இவையனைத்தையும் இராணுவச் செயல்முறையின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என்றும் எண்ணம் பூண்டுள்ளனர். இத்தகைய இராணுவ விவகாரங்களைப் பற்றி அல்லாஹ் நம்மிடம் கூறுவதென்ன? (நமக்கெதிரான) இவ்வெதிர் சக்திகள் யாவும் தத்தம் தேவைகளுக்கேற்ப எப்பகுதியை வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு நாம் நமது கடமையை விட்டும் தூரமாக விலகி நிற்றலை அவன் விரும்புகிறானா அல்லது நம்முடைய கொள்கையிலே பற்றுறுதியுடன் நிலைத்து நிற்றலை விரும்புகிறானா?
நாம் சமூக ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ, மனோவியல் ரீதியாகவோ, கல்வி ரீதியகவோ அல்லது இன்னபிற கூறுகளின் வாயிலாகவோ சவால்களுக்குட்படுத்தப்பட்டால் நமது கொள்கையிலே பற்றுறுதியுடன் நிற்போம்! நாம் இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ சவால்களுக்குட்படுத்தப்பட்டால் நமது கொள்கையிலே பற்றுறுதியுடன் நிற்போம்!!
இவை தொடர்பில் அல்லாஹ் - ஜல்ல வ'அலா - கூறுவதாவது:
إِنَّ اللَّهَ
اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ
الْجَنَّةَ ۚ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ
فَيَقْتُلُونَ
وَيُقْتَلُونَ
"நிச்சயமாக அல்லாஹ் பற்றுறுதிகொண்ட முஸ்லிம்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டான்; (இதற்குப்) பகரமாக அவர்களுக்கு அல்-ஜன்னாஹ்வை (சுவனச் சோலைகளை) வாக்களிக்கின்றான்……."
(சூறா அத்-தவ்பா 9:111)
இங்குதான் நாம் உள்ளோம்; நீங்கள் உங்களையே அல்லாஹ்விடம் ஒப்படைக்கும்போது;
நீங்கள் சேமித்துவைத்துள்ள
உங்களது செல்வங்களையும்
உடைமைகளையும் அல்லாஹ்விடம்
ஒப்படைக்கும்போது அதற்குப் பகரமாக நீங்கள் ஒரு பரிமாற்றத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்; நீங்கள் "அல்-ஜன்னாஹ்"வைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் பதவிகளைப் பெற்றுக்கொள்ளப்
போவதில்லை; நீங்கள் பச்சை அட்டையை (Green Card) [2] பெற்றுக்கொள்ளப்
போவதில்லை; நீங்கள் - மேற்கத்திய நாடுகளில் - "காஃபிர்" குடியுரிமையொன்றைப் பெற்றுக்கொள்ளப்
போவதில்லை; அறுதியாக இவை எந்த ஒன்றையும் நீங்கள்
பெறப்போவதில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்காக வழங்கினால், அவன் உங்களுக்கு "அல்-ஜன்னாஹ்"வை - சுவனச் சோலைகளை
- வழங்குவான்.
இவையனைத்தையும் விட உயர்மட்ட அளவிலான பொறுப்பு என்பது:
இவையனைத்தையும் விட உயர்மட்ட அளவிலான பொறுப்பு என்பது:
" يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللّه
فَيَقْتُلُونَ وَيُقْتَلُون."
"…..அவர்கள் - அல்லாஹ்வுடைய இலக்கிற்காக, அவனை நோக்கிச்
செல்லும் பாதையிலே – சண்டையிடுகிறார்கள்; (இச்செயல் முறையிலே) அவர்கள் கொல்கிறார்கள், கொல்லப்படுகிறார்கள்……."
கொள்கையுறுதிடன் இருக்கும் முஸ்லிம்களுக்கு இவ்விவகாரத்தைப் பற்றிய எவ்வித கேள்வியோ, மனச்சலனமோ ஏற்பட்டுவிடக் கூடாது. பிற முஸ்லிம்கள்! அவர்கள் நடந்து கொள்ளும் விதம் உங்களுக்குத் தெரியும். அவர்கள் சாக்குப்போக்குகளின் பின்னால் மறைந்து கொள்வார்கள்; கையாலாகாத நொண்டி நியாயங்களை முன்னிருத்தி ஓடி ஒளிந்து கொள்வார்கள்; விவகாரத்தை அசட்டைச் செய்ய முற்படுவார்கள்; மேற்கூறப்பட்ட இத்தகைய விவகாரங்களில் சில அவர்களின் முன்னே வைக்கப்பட்டால் தோல்வி மனப்பான்மையின் நிமித்தம் அடிபணிந்து விடவே பிரியப்படுவார்கள். இவை குர்'ஆனில் பட்டியலிடப்பட்டுள்ளவர்களிடமோ, அல்லாஹ்வின் தூதரை (ஸல்) பற்றுறுதியுடன் பின்பற்றுபவர்களிடமோ கிஞ்சிற்றும் காணக்கிடைக்காத ஒன்று. கிஞ்சிற்றும்!!
வாழ்வின் இத்தகைய யதார்த்த உண்மைகள் ஒரு கணம் நம்முன் வைக்கப்பட்டால் என்னவாகும் என்பதைப் பார்ப்போம். நம்மில் சிலரோ: "சரி! (இதனை மெய்ப்பிக்கும் வகையிலான) போதிய சான்றாதாரங்களை வழங்குங்கள்; நடைமுறை வாழ்வில் இவைகளெல்லாம் எப்படிச் சாத்தியப்படும்?" என்பதாகக் கூறுவோம்.
அல்லாஹ்வின் தூதரது (ஸல்) போராட்ட வாழ்விலே மிகவும் கொந்தளிப்பான நேரமும், ஆபத்தான தருணமாயும் அமையப்பெற்ற உஹுதுப் போரை எடுத்துக் கொள்வோம். அவர் (ஸல்) உஹுதுப்போர்க்களத்தில் நிலைபெற்றிருந்த அவ்வேளையில், அவரோடிணைந்து சண்டையிடுவதாக உறுதிமொழியளித்திருந்த முஸ்லிம்கள் அவரைச் சூழவும் காணப்பட்டனர். ஆனால், அல்லாஹ்வின் தூதரது வாழ்நாளில் மிகவும் நெருக்கடியான, அவரது உயிருக்கே ஊறு விளைவித்த அவ்விக்கட்டான தருணத்தில் நபியாகிய அவர் தானே போர்க்களத்தில் நிலைபெற்றிருந்தும் கூட, முஷ்ரிக்குகளின் கைகள் மேலோங்கி வருவதை அவதானித்துக் கொண்ட முஸ்லிம்கள் போர்க்களத்தை விட்டும் புறமுதுகிடத் துவங்கினர்.
கொள்கையுறுதிடன் இருக்கும் முஸ்லிம்களுக்கு இவ்விவகாரத்தைப் பற்றிய எவ்வித கேள்வியோ, மனச்சலனமோ ஏற்பட்டுவிடக் கூடாது. பிற முஸ்லிம்கள்! அவர்கள் நடந்து கொள்ளும் விதம் உங்களுக்குத் தெரியும். அவர்கள் சாக்குப்போக்குகளின் பின்னால் மறைந்து கொள்வார்கள்; கையாலாகாத நொண்டி நியாயங்களை முன்னிருத்தி ஓடி ஒளிந்து கொள்வார்கள்; விவகாரத்தை அசட்டைச் செய்ய முற்படுவார்கள்; மேற்கூறப்பட்ட இத்தகைய விவகாரங்களில் சில அவர்களின் முன்னே வைக்கப்பட்டால் தோல்வி மனப்பான்மையின் நிமித்தம் அடிபணிந்து விடவே பிரியப்படுவார்கள். இவை குர்'ஆனில் பட்டியலிடப்பட்டுள்ளவர்களிடமோ, அல்லாஹ்வின் தூதரை (ஸல்) பற்றுறுதியுடன் பின்பற்றுபவர்களிடமோ கிஞ்சிற்றும் காணக்கிடைக்காத ஒன்று. கிஞ்சிற்றும்!!
வாழ்வின் இத்தகைய யதார்த்த உண்மைகள் ஒரு கணம் நம்முன் வைக்கப்பட்டால் என்னவாகும் என்பதைப் பார்ப்போம். நம்மில் சிலரோ: "சரி! (இதனை மெய்ப்பிக்கும் வகையிலான) போதிய சான்றாதாரங்களை வழங்குங்கள்; நடைமுறை வாழ்வில் இவைகளெல்லாம் எப்படிச் சாத்தியப்படும்?" என்பதாகக் கூறுவோம்.
அல்லாஹ்வின் தூதரது (ஸல்) போராட்ட வாழ்விலே மிகவும் கொந்தளிப்பான நேரமும், ஆபத்தான தருணமாயும் அமையப்பெற்ற உஹுதுப் போரை எடுத்துக் கொள்வோம். அவர் (ஸல்) உஹுதுப்போர்க்களத்தில் நிலைபெற்றிருந்த அவ்வேளையில், அவரோடிணைந்து சண்டையிடுவதாக உறுதிமொழியளித்திருந்த முஸ்லிம்கள் அவரைச் சூழவும் காணப்பட்டனர். ஆனால், அல்லாஹ்வின் தூதரது வாழ்நாளில் மிகவும் நெருக்கடியான, அவரது உயிருக்கே ஊறு விளைவித்த அவ்விக்கட்டான தருணத்தில் நபியாகிய அவர் தானே போர்க்களத்தில் நிலைபெற்றிருந்தும் கூட, முஷ்ரிக்குகளின் கைகள் மேலோங்கி வருவதை அவதானித்துக் கொண்ட முஸ்லிம்கள் போர்க்களத்தை விட்டும் புறமுதுகிடத் துவங்கினர்.
இதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள் சகோதர, சகோதரிகளே! குறிப்பாக "நாங்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் இருக்கிறோம்" என்று கூறிக்கொள்ளும் நம்மிலே சிலர், இவ்வார்த்தைகளைக்
கூறும் முன்னர் சற்றாழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம். அவர் (ஸல்) மரணத்தை எதிர்கொள்ளும்
தருணத்தில் நிலைத்திருந்தபோது அவருடனிருந்ததோ வெறும் ஏழு முஸ்லிம்கள் மட்டுமே.
நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்! பலநூறு
பேர்களை உள்ளடக்கியதொரு படையாகத்தான் இதன் ஆரம்ப நிலை அமைந்திருந்தது. போர்களத்துக்குச் செல்லும் வழியிலேயே முனாஃபிக்குகள் பின்வாங்கிக்
கொண்டனர். (மலைகளின் மீது) நிரந்தர
நிலையிடம் கொடுக்கப்பட்டவர்களும் - முஷ்ரிக்குகள் விட்டுச்சென்ற - போர் பொருட்களினால் கவரப்பட்டு திசைதிருப்பப்பட்டனர்.
முஷ்ரிக்குகளோ அல்லாஹ்வின் தூதரது
(ஸல்) நிலையிடத்தையே
தங்களது பிரத்தியேக இலக்காகக் குறிவைத்து பௌதிக ரீதியான தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தனர். இத்தகைய சூழலில் அங்கே ஸ்திரத்தன்மையுடன் நிலைபெற்றிருந்தவர்கள்
யார்? அன்ஸாரிகளிலிருந்து ஏழு முஸ்லிம்கள்; முஹாஜிரீன்களிலிருந்து இரண்டு முஸ்லிம்கள்.
அவ்வளவே! அவ்விக்கட்டான தருணத்தில் அவரோடிருந்தவர்கள் இத்தனை நபர்கள்தாம்! மனமுடைந்து
போனவர்களையும் உத்வேகத்தை இழந்தவர்களையும் ஊக்கப்படுத்தும் விதத்தில் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) சில வார்த்தைகளைக் கூறவேண்டியிருந்தது.
அவர்கள் (ஸல்) கூறினார்கள்:
"மன் யு காத்திலு அன்ன' வ'லஹுல் ஜன்னாஹ்"
"சுவனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எங்களைப் பாதுகாத்து (எதிரிகளுடன்) சண்டையிடப் போவது யார்? "
அல்லது பிறிதொரு விவரிப்பில் கூறப்பட்டதாவது:
"மன் யு காத்திலு அன்ன' வ'ஹுவ ரஃபீகி ஃபில் ஜன்னாஹ்"
"எங்களுக்காக இங்கே (எதிரிகளுடன்) சண்டையிடுபவர் சுவனத்தில் என்னுடைய தோழராக இருப்பார்"
அவர்கள் (ஸல்) கூறினார்கள்:
"மன் யு காத்திலு அன்ன' வ'லஹுல் ஜன்னாஹ்"
"சுவனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எங்களைப் பாதுகாத்து (எதிரிகளுடன்) சண்டையிடப் போவது யார்? "
அல்லது பிறிதொரு விவரிப்பில் கூறப்பட்டதாவது:
"மன் யு காத்திலு அன்ன' வ'ஹுவ ரஃபீகி ஃபில் ஜன்னாஹ்"
"எங்களுக்காக இங்கே (எதிரிகளுடன்) சண்டையிடுபவர் சுவனத்தில் என்னுடைய தோழராக இருப்பார்"
(இவ்வார்த்தைகளினால் உந்தப்பட்ட) அவர்கள் போரிட்டார்கள்! ஒருவர்பின் ஒருவராக, அல்லாஹ்வின் தூதரைச் சூழவிருந்த அந்த முஸ்லிம்கள், தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களாய்! மிகப் பிரம்மாண்டமான விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென்பதை அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். என்றாலும், அவர்களை அல்லாஹ் வாழ்வு, மரணத்தின் விளிம்பிற்கு கொண்டுசெல்ல விரும்பினான் போலும். அல்லாஹ்வின் தூதரது விருப்புறுதியும் சங்கற்பமும்தான் பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களை அவ்விளிம்பை நோக்கி இட்டுச் சென்றது.
இப்பொழுது, இவ்வுண்மைகளை தற்கால முஸ்லிம்களின் மனத்திற்கும் அவர்களது கவனத்திற்கும் கொண்டு வருவோம். இத்தகைய விவரங்கள் இன்று மீள்பிரதியிடப்பட்டு அவர்களிடம் வழங்கப்பட்டால் இதனைப் பொருத்து அவர்களின் நிலைப்பாடு எத்தகையதாக இருந்திருக்கும்? அவர்களுள் சிலரோ: "ஒரு நிமிடம் நிறுத்துங்கள்! நமது இராணுவ உற்பத்தியினை முதலில் நாம் அதிகப்படுத்த வேண்டும்; ஒரு இராணுவ தொழில்துறை உள்கட்டமைப்பினை நாம் உருவாக்க வேண்டும்; ஒப்பீட்டளவில் எதிரிப்படையினருக்கும் நமக்குமிடையே சில வகை இராணுவச் சமச்சீர்மை அமையப்பெற்றிருத்தல் வேண்டும்; இத்யாதிகள்" போன்ற வெற்றுக் காரணிகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே செல்வார்கள். இவற்றை கொள்கையுறுதியின் அடிப்படையில் அவர்கள் பேசவில்லை. மாறாக, தங்களது கடமைகளை விட்டும் வெருண்டோடுவது, தங்களது கொள்கையை உதாசீனம் செய்வது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் பேசுகின்றனர்.
إِن يَكُن
مِّنكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم
مِّائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ
الَّذِينَ كَفَرُوا
بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ
(சூறா அல்-அன்ஃபால் 8 :65)
"உங்களில் பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வீர்கள். இன்னும் உங்களில் (பொறுமையாளர்களான) நூறு பேர் இருந்தால் - அல்லதீன கஃபரு - விலிருந்து ஆயிரம் பேர்களை வெற்றி கொள்வீர்கள். ஏனெனில், இக்காஃபிர்களோ உலகின் யதார்த்த உண்மைகளோடு செயல்முறைத் தொடர்பிலில்லை. இவ்வியக்கவியலை அவர்களால் புரிந்துணர்ந்து கொள்ள முடியாது."
காஃபிர்களால் இவற்றைப் புரிந்து கொள்ளவியலாது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், இவ்வியக்கவியலின் செயல்முறை விளக்கங்களை முன்னர் பன்முறை நாம் கடந்து வந்திருக்கிறோம் என்ற நிலையிருந்தும் கூட, முஸ்லிம்களால் இவற்றைப் புரிந்துகொள்ள இயலவில்லை என்பது புரிந்துகொள்வதற்கு கடினமானதொரு விடயமாகவே நம்முன் காட்சியளிக்கிறது. இதில் புதுமை என்று ஏதுமில்லை. வரலாறு தன்னைத்தானே மீளவும் புதுபித்துக்கொண்டே வருகிறது.
இன்று முஸ்லிம்கள், மிகுதியான எண்ணிக்கையையும் பல்வேறு
இராணுவ கட்டமைப்புகளையும் தன்னகத்தே கொண்டவர்களை எதிர்கொள்கின்றனர். அவர்களிடம் -
எதிரிகளிடம் - சகலமும் உள்ளது; பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களிடம் அரிதாகவே எதுவும் இல்லை.
நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம்?! நம்மீது திணிக்கப்பட்டுள்ள அரசாங்கங்களும் ஆட்சி
முறைகளும் முஸ்லிம்களிடம் அமையப்பெற்றுள்ள புரட்சிகர உத்வேகத்தை கபளீகரம் செய்யும்
நோக்கிலேயே இடையறாது செயலாற்றிக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இப்பொழுது குர்ஆன்,
சுன்னாஹ்வின் ஆழிய அர்த்தங்களுக்கெதிராக வாதிடுவதன் நிமித்தம் 'இஸ்லாமிய அறிஞர்களை'
உற்பத்தி செய்து அனுப்பி வைப்பதற்கான அபரிமித தேவை எழுந்துள்ளது.
மற்றுமொரு உதாரணம் வேண்டுமா? 'மு’அத்தா போர்!' ஜுமாதா மாதம் ஹிஜ்ரி
8ஆம் ஆண்டில் இப்போர் நடைபெற்றது. இன்று 'லெவான்ட்' என்று பரவலாக அறியப்படுகிற - தோராயமாக இன்றைய
பாலஸ்தீனம், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய - அரேபிய தீபகற்பத்திற்கு வடக்கே அமையப்பெற்றுள்ள,
புனித பூமியின் எல்லைக்குட்பட்ட
பகுதியை ஆட்சி செய்துவந்த ரோமானிய ஆட்சியாளரிடம்
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) ஒரு தூதுவரை அனுப்பி வைத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதி என்ற வகையில் ஹாரிஸ் இப்னு உமைர் அல்-அஸ்தி எனும் பெயர்கொண்ட இந்தத்
தூதுவர் அப்பகுதிக்குச் சென்று அங்கே ஆட்சி செலுத்தி வந்த ரோமானிய ஆட்சியாளரிடம் இஸ்லாத்தை எடுத்துரைத்தார். இந்த தா'வாவைப் பாருங்கள்! தா'வாவைப் பற்றி பேசும் மக்கள், எதைப் பற்றி பேசுகிறார்கள்? பகட்டுக் குறைவான, மக்களது கவனத்தை எளிதில் ஈர்த்திடாத அத்தகைய பகுதிகளுக்கு தா'வாவின் நிமித்தம் முஸ்லிம்கள் செல்வதுண்டா? எங்கோ உலகின் பரபரப்பான சில மூலைகளுக்குச் சென்று இஸ்லாத்தைப் பற்றிய ஏதோ ஓரிரு வார்த்தைகளை இரகசியமாக முனுமுனுத்து விட்டு வந்துவிட வேண்டும், அவ்வளவுதான். தூதுவர்களை உலகத்து ஆட்சியாளர்களிடம் அனுப்பி வைப்பதைப் பற்றி சிந்தனைச் செய்யும் இம்மாதிரியான தா'வா செயல்திட்டங்கள் நம்மிடம் இருக்கின்றனவா? இல்லை! அந்த அளவிற்கெல்லாம் இங்கே எதுவும் இல்லை. ஏனெனில் தா'வாவானது - இதுபோன்று (ஆட்சியாளர்களின்) பகுதிகளில் பிரவேசிப்பதற்கோ அல்லது அவர்களிடம் சென்று விவாதம் புரிவதற்கோ
- ஏற்புடையதல்ல. இது அல்லாஹ்வின் தூதருடைய
சுன்னாஹ் அல்ல!
அவர் (ஸல்), இவ்வாறாக தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் ஒரு மனிதரை அரேபியாவின் வடக்கே நிறுவப்பெற்றிருந்த பேரரசொன்றின் ஆட்சியாளரிடம் அனுப்பிவைத்தார்கள். அல்லாஹ்வின் தூதருடைய இத்தூதுவர் தனது பணியை நிறைவு செய்துவிட்டுத் திரும்பும் வழியிலே கொல்லப்படுகிறார். ஹாரிஸ் அல் அஸ்தி என்ற இத்தூதுவர் கொல்லப்படுகிறார்! நபி (ஸல்) அவர்களின் தூதுவரில் ஒருவர் கொல்லப்படுவதென்பது இதுவே முதன்முறை.
பிற்காலத்தில் இம்மாதிரியான பற்பல
சம்பவங்கள் நடந்தேறியது என்றாலும், இதற்கு முன் இதுபோன்றவொரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. முஸ்லிம்கள் என்ன செய்யப் போகிறார்கள்? பாருங்கள்! ரோமானியர்களோ ஒரு சக்திவாய்ந்த வல்லரசு. எவ்வாறு
அமெரிக்கா இன்றைய உலகின் சக்திவாய்ந்த வல்லரசாக இனம்காணப்படுகிறதோ அதுபோன்று. நாம் என்ன செய்யப் போகிறோம்? இவ்வல்லரசை
எதிர்த்துப் போரிடப் போகிறோமா?
முஸ்லிம்கள் இதற்கு முன்னர் அரேபிய தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னேற்றத்தை ஈட்டியிருக்கின்றனர்
என்பது ஒருபுறமிருக்க அன்றைய உலகின் பகாசுர சக்தியொன்றை எதிர்த்துச் சண்டையிடுவதைப்
பற்றியோ போரிடுவதை பற்றியோ சிந்தித்துப் பார்பதென்பது ஓர் இராணுவ தற்கொலை நடவடிக்கையைப்
பற்றிச் சிந்திப்பதற்குச் சமானமாகும்.
இப்பேர்ப்பட்ட செயலொன்றைச் செய்வது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) யோசிப்பார்களா? ஆம்! அப்படித்தான் யோசித்தார்கள்!! மூன்றாயிரம் முஸ்லிம் வீரர்களை உள்ளடக்கியதொரு படையை அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். முஸ்லிம்களைப் பொறுத்த அளவில், புதிய பிரதேசங்களினுள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இத்துணை எண்ணிக்கையை உள்ளடக்கியதொரு படையை ஒன்று திரட்டியதென்பது இதுவே முதன்முறை.
இப்பேர்ப்பட்ட செயலொன்றைச் செய்வது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) யோசிப்பார்களா? ஆம்! அப்படித்தான் யோசித்தார்கள்!! மூன்றாயிரம் முஸ்லிம் வீரர்களை உள்ளடக்கியதொரு படையை அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். முஸ்லிம்களைப் பொறுத்த அளவில், புதிய பிரதேசங்களினுள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இத்துணை எண்ணிக்கையை உள்ளடக்கியதொரு படையை ஒன்று திரட்டியதென்பது இதுவே முதன்முறை.
மூன்று நபர்கள் இப்படைக்குத் தலைமைத் தாங்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) கட்டளையிட்டார்கள். முதலாம் நபர் ஸைத் இப்னு அல்-ஹாரிஸா
(ரழி); இவர் கொல்லப்பட்டால் அடுத்து
தலைமையேற்கப் போவது ஜாஃபர் இப்னு அபுதாலிப் (ரழி); இவரும் இப்போரிலே வீழ்ந்தால், அடுத்து வரப்போவது அப்துல்லாஹ் இப்னு ரவாஹா
(ரழி).
இப்போரில் எதிரிகள் முக்கிய இலக்காக குறிவைக்கப்போவது இராணுவத் தலைமையைத்தான்; அதாவது தலைமையின் நிமித்தம் போர்க்கொடியை ஏற்றுக்கொள்ளப்போகும் உங்கள் மூவரையும்தான்
என்பதாக போர்வீரர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் தனது நுண்ணறிவினூடாக அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) முன்னறிவுப்புச் செய்தார்கள்.
பொதுவாக தளபதிகளே அந்நாட்களில் போர்க்கொடிகளை சுமப்பவர்களாக இருந்தார்கள்; அவர்கள் முன்னணியில் நின்று சண்டையிடுவதோடு எஞ்சியிருக்கும் படையணிகளையும் ஒழுங்குபடுத்துபவர்களாக இருந்தார்கள். ஆதலால் அவர்களைப் பார்த்து "அநேகமாக நீங்கள் கொல்லப்படுவீர்கள்" என்பதை நேரடியற்றதோர் வழிமுறையில் கூறுவதாகவே இக்கூற்று அமைந்திருந்தது.
நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்! நாம் எண்ணிக்கையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இப்போதுள்ள ஒட்டுமொத்த விவகாரமும், இன்றைய முஸ்லிம் மனங்களை செல்லரித்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த ஷைத்தானிய கரையானும் யாதெனில், “நமக்கான தேவை எண்ணிக்கை!” என்பதே. கொள்கையுறுதியைப் பற்றியொன்றும் பாரிய அளவிலே இவர்கள் விசனப்படவில்லை; அல்லாஹ்வைப் பற்றியொன்றும் பாரிய அளவிலே இவர்கள் விசாரப்படவில்லை. இவர்களுடைய விசாரமெல்லாம் தங்களிடமிருக்கும் பௌதிக, சடவாத உடைமைகளைச் சார்ந்ததாகவே அமைந்திருக்கிறது.
இதனை நாம் பேசிக்கொண்டிருப்பவற்றுடன் ஒப்பிடுங்கள். இத்தகைய வாதங்களை வழிமொழிபவர்களோ
முன்னுதாரணமாகத் திகழவேண்டியவர்கள்; இதுபோன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை
நமக்குக் காண்பித்துத் தர வேண்டியவர்கள்.
ஆக, அவர்கள் தோராயமாக இன்று ஜோர்டான் என்றழைக்கப்படும் அப்பகுதியை நோக்கிச் சென்றனர். அங்கே பிரசன்னமாகியிருந்த 'எதிரிடை' காஃபிர் படையை அல்லது 'எதிர்கொள்ளும்' காஃபிர் படையை துரிதகதியில் மதிப்பீடு செய்கின்றனர். ஏறக்குறைய ஒரு லட்சம் ரோமானியர்களை பார்க்கின்றனர்; மீளவும் தங்களது பார்வையைச் செலுத்துகின்றனர்; மற்றுமொரு ஒரு லட்சம் உள்ளூர் வாசிகளைப் பார்க்கின்றனர். இவர்கள் அக்காலகட்டத்திலே, பொதுவான அப்பகுதியில் மேலாதிக்கம் செலுத்திவந்த கிறிஸ்தவ அரேபியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம் இரண்டு லட்சம் (வீரர்கள்)!! முஸ்லிம்கள் தங்களுக்குள் வியப்பு மேலிட ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
ஆக, அவர்கள் தோராயமாக இன்று ஜோர்டான் என்றழைக்கப்படும் அப்பகுதியை நோக்கிச் சென்றனர். அங்கே பிரசன்னமாகியிருந்த 'எதிரிடை' காஃபிர் படையை அல்லது 'எதிர்கொள்ளும்' காஃபிர் படையை துரிதகதியில் மதிப்பீடு செய்கின்றனர். ஏறக்குறைய ஒரு லட்சம் ரோமானியர்களை பார்க்கின்றனர்; மீளவும் தங்களது பார்வையைச் செலுத்துகின்றனர்; மற்றுமொரு ஒரு லட்சம் உள்ளூர் வாசிகளைப் பார்க்கின்றனர். இவர்கள் அக்காலகட்டத்திலே, பொதுவான அப்பகுதியில் மேலாதிக்கம் செலுத்திவந்த கிறிஸ்தவ அரேபியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம் இரண்டு லட்சம் (வீரர்கள்)!! முஸ்லிம்கள் தங்களுக்குள் வியப்பு மேலிட ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
"பாருங்கள்! இங்கே நாம் வெறும் மூன்றாயிரம் மட்டுமே; நமக்கெதிராக அங்கே தயார் நிலையில் இருப்பதென்ன என்பதைச் சற்றுப் பார்வையிடுங்கள். இரண்டு லட்சத்தை உள்ளடக்கிய காத்திரமானதொரு பெரும் படை நமக்கெதிராக முகாமிட்டுள்ளது; அப்பெரும்படையின் இராணுவத் தளவாடங்களுக்கு நாம் எவ்வகையிலும் சமானமாக மாட்டோம் என்பதோடு, ஒப்பீட்டளவிலே நம்மிடம் இருக்கும் போர்த்தளவாடங்களை விடவும் மேலதிகமாகவே அவர்களிடம் உள்ளது. எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் இவ்விடயத்தில் எவ்விதச் சமன்பாட்டையும் கண்டுகொள்ள முடியவில்லை! முஸ்லிம்கள் என்ன செய்யப்போகிறார்கள்? ஒரு சராசரி மனிதன் என்ன செய்வான்? நீங்களாக இருந்தால், அத்தகைய சூழலிலே என்ன செய்திருப்பீர்கள்? உங்களுடைய மனித இயல்பும் அவர்களுடைய மனித இயல்பும் ஒத்த தன்மையில்தான் எதிர்வினையாற்றும்.
"இங்கே ஒரு நிமிடம் நிறுத்துங்கள்! போர்முனையில் காணப்படும் இம்முரண்பாட்டைக் குறித்தவொரு தூதுச்செய்தியை ஆலோசனையின் நிமித்தம்
நாம் அல்லாஹ்வின் தூதருக்கு
அனுப்பி வைக்க வேண்டும்" என்பதாகக்
கூறினார்கள். ஆம்! இதுதான்
அச்சூழலில் அவர்கள் கூறியது.
சற்றேறக்குறைய அனைவருமே இத்திட்டத்திற்கு உடன்பட்ட
அத்தருணத்தில் ஒருவர் மட்டும் அப்படையணியினுள் இருந்து வெளித்தோன்றி: "ஒரு நிமிடம்
நிறுத்துங்கள்! எவற்றை எதிர்கொள்வதற்காக நாம் அனுப்பிவைக்கப்பட்டோமோ அவற்றை நீங்கள்
பகிரங்கமாகப் புறக்கணிக்க முயற்சிக்கிறீர்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம்
இப்பணியை மேற்கொள்ளும் பொருட்டு நம்மை இங்கே அனுப்பிவைத்தார்கள்; அல்லாஹ்வை நோக்கி
மீளும் பாதையிலே நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் நன்கறிவோம். இவ்வாறிருந்தும்,
இங்கே நீங்கள் என்ன செய்ய உத்தேசிக்கிறீர்கள்? உங்களது பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க
முயற்சிக்கின்றீர்களா?" என்பதாக வீறிட்டார். அவரது இப்பேச்சாற்றலின் வீச்சு முஸ்லிம்களை
வெகுவாக அசைத்தது.
அல்லாஹ்வின் தூதர்தான் அவர்களை ஒருங்கிணைத்தார்கள்;
அவர்களிடம் இப்பொறுப்பினை ஒப்படைத்தார்கள்; இத்தகையவொரு சூழலில் அவர்கள் அல்லாஹ்வின்
விருப்புறுதியை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். இதனை மனதிலிருத்திக் கொண்ட அவர்கள் தங்களைத்
தாங்களே ஒழுங்குபடுத்தித் தயார் செய்து கொண்டபின் அவ்விரு படையணிகளும் ஒன்றையொன்று
சந்தித்துக்கொண்டன. இச்சந்திப்பின் பிற்பாடு நடந்ததென்ன?
போர்களத்திலே முஷ்ரிக்குகள் - அவ்வொட்டுமொத்த
'இஸ்லாமிய-எதிர்ப்புப்' படை - பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களின் பொறுப்புணர்வு, தியாகங்கள்,
செயல்நோக்கம், தீவிர உளவுறுதி, கட்டுப்பாடு முதலியவற்றை வியப்பு மேலிட காண்கின்றனர்.
இவையனைத்தும் அவர்களை உளவியல் ரீதியாக போர்க்களத்தின் 'தற்காப்பு மருங்கில்' எறிந்தது.
இப்பொழுதோ பின்வாங்கும் எண்ணத்தை ஒரு சிறிதேனும் வெளிக்காண்பித்திடாத காத்திரமானதொரு
பொறி பறக்கும் படைக்கு எதிராக முஷ்ரிக்குகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்
கொள்ள வேண்டியதாயிற்று.
முஸ்லிம்கள் எவ்வாறு இத்தகைய சங்கற்பத்தை வெளிப்படுத்தினார்கள்?
இக்கட்டுக்கோப்பான இராணுவ அசைவு; இதற்கு எவ்வாறு அவர்கள் செயல்வடிவம் கொடுத்தார்கள்?
முதல் தளபதி ஜைத் இப்னு ஹாரிஸா தனது நிலையிடத்தை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு
தீரத்துடன் போரிட்டார்; அறுதியாக தனது இன்னுயிரை இழந்தார். இந்நிகழ்வானது போர்படைச்
சூழ பத்தாயிரத்துக்கும் அதிகமான போர்வீரர்களின் முன்னிலையில், அவ்வீரர்களே கண்கூடாகப்
பார்த்து வியக்கும் வண்ணம் நடந்தேறியது.
அதன் பிற்பாடு இரண்டாம் தளபதி; இரண்டு ஹிஜ்ராக்களில்
அனுபவம் பெற்றிருந்த ஜாஃபர் இப்னு அபுதாலிப். இன்று "இஷ்திஷ்ஹாதி"
நடவடிக்கை [3] என்றறியப்படும் போர் உத்தியில் பங்கேற்க தன்னுடைய
சொந்த இரத்த பந்தங்களில் சிலரை அனுப்பிவைப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கிஞ்சிற்றும்
தயக்கம் காட்டிடவில்லை என்ற அடிப்படையில் வளர்ந்துவரும் இஸ்லாமிய சமூகத்தைச் சூழவும்
பிரசன்னமாகியிருந்தவர்களுக்கோர் அறிவுறுத்தலாக அமையும் பொருட்டு, தானே மனமுவந்து ஜாஃபர்
இப்னு அபுதாலிபை தெரிவுசெய்து அனுப்பிவைத்தார்கள்.
போர்க்களத்தில் கடுமையாக போரிட்ட அவர் தனது முதல்
கையை இழந்தார்; தொடர்ந்து போரிட்ட அவர் தனது இரண்டாவது கையை இழந்தார்; மீளவும் தொடர்ச்சியாகப்
போரிட்ட அவர் தனது இன்னுயிரை இழந்தார்!! அதன்பின்னர், நபியவர்களின் துல்லியமான அறிவுறுத்தலின்
பிரகாரம் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா இந்த இராணுவப் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இவரும் வீராவேசத்துடன் போரிட்டு இறுதியில் ஷஹீதானார்.
முஸ்லிம்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்? அல்லாஹ்வின்
தூதரால் நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகளுமே அவர்களின் கண்முன்னால் ஷஹீதாக்கப்பட்டுவிட்டார்கள்.
இந்நிலையில், அவர்கள் தன்னியல்பாக முன்வந்து தங்களுள் ஒருவரிடம் - ஒரு சராசரி மனிதரிடம்
- போர்க்கொடியை ஒப்படைத்தார்கள். இம்மனிதரோ இரண்டொரு தருணங்களுக்கு முன்னர்வரையில்
"நான் இதனை ஏற்க முடியாது! இப்பதவிக்கு நான் தகுதியானவன் அல்லன்" என்றே கூறிக்கொண்டிருந்தார்.
போர்க்களத்தின் அத்தகைய ஆபத்தான, வாழ்வை அச்சுறுத்தும் தருணத்திலே பொது அறிவு மேலோங்கியது.
முந்தைய நாட்களில் நெடிய கால இராணுவ அனுபவங்களைப் பெற்றிருந்த "ஃகாலித் இப்னு
அல்-வலீதிடம்" முஸ்லிம்கள் தன்னெழுச்சியாக முன்வந்து போர்க்கொடியை ஒப்படைத்தார்கள்.
"பாருங்கள்! இவரொரு இராணுவத் தளபதி; மெய்யாகவே
இவர் முஸ்லிம்களுக்கெதிராக ஆண்டுகள் நெடுகிலும் போர் புரிந்திருக்கிறார்; நம்மத்தியிலோ
இஸ்லாமியத் தலைமைத்துவமொன்று இப்பொழுதில்லை; இவரோ அனுபவமிக்கவர்; போர்க்கொடியை இவரிடமே
ஒப்படைக்கலாம்". இங்ஙனம் அவர்கள் தங்களது தலைமையினைத் தெரிவு செய்தார்கள்.
பின்னர் ஃகாலித் இப்னு வலீத், தான் பெற்றிருந்த
ஒட்டுமொத்த இராணுவ அனுபவங்களுக்கும் போர்களத்திலே செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கினார்.
படையணியின் வலது மருங்கையும் இடது மருங்கையும் மறுசீரமைப்புச் செய்தார்; அதன் அமைப்புகளை
மற்றினார். "இடையறாது வந்துசேரும் புதிய துருப்புகளினூடே முஸ்லிம்கள் வலுவூட்டப்படுகிறார்கள்"
என்ற உணர்வினை எதிரியிடம் ஏற்படுத்தினார். இத்தகைய முன்னேற்றங்களின் விளைவாக ஒத்துழைக்க
மறுத்த இரண்டு லட்சத்தை உள்ளடக்கிய அப்பெரும் படை தன்னுள் சிதறத் தொடங்கியது. அவர்களில்
சிலரோ போர்முனையை முற்றிலுமாக புறக்கணிக்கத் தொடங்கினர்.
இவ்வாறு இரண்டு லட்சம் முஷ்ரிக்குகளை மூன்றாயிரம்
முஸ்லிம்கள் எதிர்த்துக் களம் கண்ட அப்போரிலே, பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களின் இறுதி
எண்ணிக்கை தான் எத்தனை? வெறும் பன்னிரெண்டு!! எனினும் முஷ்ரிக்குகளிலோ நூற்றுக்கணக்கானோர்,
இன்னும் சொல்லப்போனால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களுக்கு இது ஒரு முழுமையான
வெற்றியல்ல, தோல்வியுமல்ல!!
அல்லாஹ்வின் பாதையிலே வீறுநடைபோடும் முஸ்லிம்களின்
மனங்களினுள் "இவ்விவகாரம் ஒரு வெற்றியா அல்லது தோல்வியா?" என்ற சிந்தனையெல்லாம்
இழையோடிக்கொண்டிருக்க வில்லை.
ذَٰلِكَ
بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ
اللَّهِ وَلَا يَطَئُونَ مَوْطِئًا
يَغِيظُ
الْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوٍّ نَّيْلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِ
عَمَلٌ صَالِحٌ
"……ஏனென்றால் அல்லாஹ்வின்
பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்), பசி, இறைமறுப்பாளர்களை ஆத்திரமூட்டும்படியான
இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவுமே இவர்களுக்கு நற்கருமங்களாக
பதிவு செய்யப்படாமலில்லை.….."
(சூறா அத்-தவ்பா 9:120)
அல்லாஹ், நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகி விட்டால்,
இத்தகைய இயக்கவியலும் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே இருக்கும்.
தாகம்,
சோர்வு, பசி ஆகியவற்றால் நாம் பீடிக்கப்படுதல்; புதிய பிரதேசங்களுக்குள் பிரவேசித்தல்;
எதிரியின் மீது தீங்கையும், பாதிப்பையும், காயமேற்பட்டவர்களையும் அதிகரித்தல் ஆகிய
இவையனைத்தையும் அல்லாஹ் நமது நற்கருமங்களாகப் பதிவு செய்யாமலில்லை. இதுவே அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) உயிர்ப்பித்துக் காட்டிய உளவியலின் ஓர் அங்கமான உந்துசக்தி.
இவ்வெதிர்படுதலில் முஸ்லிம்களின் தளபதிகள் தங்களது
சொந்த போர்வாட்களில் 7 அல்லது 8 அல்லது 9 வாட்களை தங்களது கரத்தினூடாகவே அழிவுக்குட்படுத்தினார்கள்
என்பதாகக் கூறப்படுகிறது. இறுதியாக, முஸ்லிம்களின் ஆயுதந்தரித்த இராணுவ அதிரடிப்படை
மதீனாவுக்குத் திரும்பியது.
இன்றைய உலகநோக்கின் அடிப்படையிலோ அல்லது இஸ்ரேலிய மனப்போக்கின்
அடிப்படையிலோ மேற்கூறிய நிகழ்வினை நாம் பகுப்பாய்வு செய்வோமெனில்; நினைவிலிருத்திக்
கொள்ளுங்கள், மேற்கூறியது போன்ற ஒரு சூழ்நிலையே மூஸாவின் (அலை) பின்பற்றாளர்களுக்கும்
வழங்கப்பட்டது. சுற்றியுள்ள சூழ்நிலையை நன்கு அவதானித்துக் கொண்ட அவர்கள்: "நாம்
(எண்ணிக்கையளவிலே) மிகவும் சொற்ப தொகையினராக உள்ளோம். இப்போரிலிருந்து வெற்றியாளர்களாக
வெளிவருவதென்பது சாத்தியமற்ற ஒன்று" என்று கூறியதோடு, அறுதியாக "நாங்கள்
போரிடப்போவதில்லை" என்றும் மறுதலித்துவிட்டார்கள்.
யுத்தம் என்று வந்துவிட்டாலே மேற்கூறியத் தகவல்களைக்
கணக்கீடு செய்யத் தொடங்கிவிடும் இதுபோன்ற மனோபாவத்தை இன்றைய உலகில் நாம் தோலுரித்துக்
காட்ட முற்பட்டால், நம்மத்தியிலுள்ள முஸ்லிம்களே அப்பட்டியலில் கணிசமானவர்களாக இடம்பெறுவார்கள்.
அவர்கள் உங்களிடம் பின்வரும் வார்த்தைகளைக் கதைப்பார்கள்: "உங்களுக்கொன்று தெரியுமா,
இதுவெல்லாம் (நடைமுறை வாழ்வில்) சாத்தியமில்லாத ஒன்று. நமக்கெதிராக அணிதிரண்டு வந்துள்ள
படைகளுக்கெதிராக நம்மால் நிச்சயமாக ஈடுகொடுக்க முடியாது".
இதுவல்ல அல்லாஹ்வின் தூதர் நடந்துகொண்ட விதம்! இன்னும்,
அவருடனிருந்தவர்களின் நடத்தையும் கூட இவ்விதம் அமைந்திருக்கவில்லை!! மானுட இயற்கை எதிர்கொண்ட
தோல்வியின் அத்தருணங்களில், அந்நாட்களில் சோதனைகள் இருந்தன; இடையூறுகளும் தலையீடுகளும்
இருந்தன; இடர்ப்பாடுகள் அதிகமதிகம் இருந்தன; நிச்சயமாக இருந்தன!
தங்களிடம் ஒப்படைக்கப்பட்டப் பணிகளை இறுதிவரை சுமக்கவியலாது
போன தோழர்களும் அங்கே இருக்கத்தான் செய்தனர். தவிரவும், முஸ்லிம்களின் கூட்டமைப்பு
"முனாஃபிகீன்களால்" துளையிடப்பட்டிருந்தது. இவை வாழ்வின் யதார்த்த
உண்மைகள். முஸ்லிம்களிடம் இருந்ததை விட எதிரிகளிடத்தில் எதிர்த்துத் தாக்கும் வலிமையும்
சண்டையிடும் வலிமையும் அபரிமிதமாக அமைந்திருந்தன. இது வாழ்வின் யதார்த்த உண்மை. எனினும்,
இவைகளெதுவுமே தங்களது பணிகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதை விட்டு பற்றுறுதி
கொண்ட முஸ்லிம்களை மடைமாற்றிடவில்லை. முஸ்லிம்கள் 'கொள்கையுறுதி கொண்ட முஸ்லிம்களாக'
இருந்த காரணத்தால்!!!
قَدْ كَانَ
لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ الْتَقَتَا ۖ فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ
وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ
رَأْيَ
الْعَيْنِ
"இரண்டு எதிரெதிரான போர் முகாம்களும் (ஒன்றையொன்று)
சந்தித்துக்கொண்ட அவ்வெதிர்படுதலில் உங்களுக்கு ஓர் அத்தாட்சியுள்ளது...."
(சூறா
ஆல-இம்ரான் 3:13)
قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ الْتَقَتَا
அத்தாட்சி என்றால் என்ன? மனிதர்கள் அல்லாஹ்வின்
கட்டளையை நிறைவேற்ற எத்தனிக்கும் நிகழ்வுகளில், அல்லாஹ்வின் பிரசன்னத்தைப் பறைசாற்றி
நிற்கும் செயல் விளக்கமே அத்தாட்சி. ஆம்! இதுவே அத்தாட்சி!
فِئَةٌ
تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ
رَأْيَ الْعَيْنِ
இரண்டு படையணிகள் போர்க்களத்திலே இராணுவத் தோரணையில்
ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன. ஒன்று அல்லாஹ்வுக்காகப் போரிடுகின்றது; மற்றொன்று அல்லாஹ்வை
எதிர்த்துப் போரிடுகின்றது. அவர்கள் (முஸ்லிம்கள்), எண்ணிக்கையளவிலே தங்களைவிடவும்
இரட்டிப்பாகக் காட்சியளிக்கும் எதிரிப்படையை தங்களது சொந்த விழிகளாலேயே பார்க்கின்றனர்.
இன்று, இவ்வுண்மையானது கள யதார்த்தமாக நம் கண்முன்னே
விரிகிறது. நாம் வரலாற்றைக் குறித்து மட்டும் பேசவில்லை. இன்று, நம்முடைய இக்காலகட்டத்தின்
'மாபெரும் வல்லரசான' அமெரிக்கா, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விதைத்த விதைகளுக்கெதிராக
யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது; "ஃபீ சபீலில்லாஹ்" அல்லாஹ்வின்
பாதையில் போராடி உயிர்த் தியாகம் செய்ய சங்கற்பம் பூண்டவர்களிடம் அது தனது யுத்த தந்திரங்களை
நிரூபிக்க முயன்றுகொண்டிருக்கிறது. இவையனைத்தையும் அவதானித்துக் கொண்டிருக்கும் மக்கள்;
இவர்கள் காண்பதென்ன?
يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْيَ الْعَيْنِ
தங்களை எதிர்க்கும் படைகள், தங்களை விடவும் எண்ணிக்கையளவிலே
இரட்டிப்பாக இருப்பதைப் பார்க்கின்றனர்.
இவற்றைப் பற்றி கடந்துபோன வாரங்கள், மாதங்கள், வருடங்கள்
மற்றும் தசாப்தம் நெடுகிலும் அவர்கள் கூறிவந்ததைப் பாருங்கள். அவர்களது குரல்கள் இப்போது
சப்தமாகவும், தெளிவாகவும் நம்மை வந்தடைகின்றன. "இதுபோன்றவொரு காலம் இருந்ததேயில்லை";
அவர்கள் நம்மிடம் கூறுவது. அமெரிக்கா உலக அரங்கிலே இன்று வெறுக்கப்படுவதைப் போன்ற இம்மாதிரியான
ஒரு காலகட்டம் இதற்கு முன்னர் முகிழ்த்ததேயில்லை. அதனை நோக்கிய உச்சபட்ச பகையுணர்வானது
உலக அரங்கில் இன்று காணக்கிடைப்பதைப் போன்று அந்நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றிலும் காணப்பட்டதில்லை.
எண்ணிக்கையளவிலே பெருந்தொகையினை தன்னகத்தே கொண்டவர்கள்
முஸ்லிம்கள்; அவர்களுடைய ஜும்'ஆ தொழுகைகளைப் பாருங்கள். ஆயிரக்கணக்கானோர் இந்த
ஜும்'ஆ தொழுகைகளுக்கு வருகை புரிகின்றனர். இத்தொழுகைகளிலே அவர்கள் எதனை மிகவும்
வலுவான முறையில் பற்றிப்பிடித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் வருகின்றனர்? நிச்சயமாக
நாம் மேலே விவரித்துக்கொண்டிருந்த அத்தகைய விவகாரங்களை அல்ல! இப்பேருண்மைக்கு உரித்தான
தனிச்சிறப்பு உயிர்பெற்று வருகிறது. இச்சிறப்பானது அல்லாஹ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
ஆகியோரது போர்ப் பாதையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்களுக்கே உரித்தானது. ஆம்!
அது அவர்களுக்குரியதே!!
அவர்கள் இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னர்
பிரிந்துசென்ற, கடந்த கால 'ஷஹீதுகளாக' இருந்தாலும் சரி அல்லது இன்றைய உருவாக்கத்திலோ,
நாளைய உருவாக்கத்திலோ வெளித்தோன்றவிருக்கும் எதிர்கால 'ஷஹீதுகளாக' இருந்தாலும்
சரி. அவர்களுக்குச் சேர வேண்டிய கண்ணியத்தின் நிழலில்தான் இத்தகைய ஆயத்துக்கள்
உயிர்பெற்று வருகின்றன.
كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ
اللَّهِ ۗ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ
"......மேலும், எத்தனை முறை இவ்வாறு நிகழ்ந்துள்ளது;
எண்ணிக்கையளவில் மிகக்குறைவாக இருந்தவர்கள், எண்ணிக்கையளவில் அபரிமிதமாக இருந்தவர்களை,
அல்லாஹ்வுடைய உத்தரவின்படி வெற்றிகொண்டது. நிச்சயமாக அல்லாஹ் - இத்தகைய சூழ்நிலைகளில்
தன்னுடன் பொறுமையோடிருக்கும் - பொறுமையாளர்களுடன் இருக்கிறான்".
(சூறா
அல்-பகரா 2:249)
".....நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால்,
அவன் உங்களுக்கு உதவி செய்வதோடு உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்".
(சூறா
முஹம்மத் 47:7)
முதல் ஃகுத்பா முடிவடைந்தது.
இரண்டாம் ஃகுத்பா:
அரசியல்களின் அருவருப்பொலிகள்; சகட்டுமேனிக்குப்
பரப்பப்படும் ஊடகங்களின் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள்; வஞ்சகப் பரப்புரைகள்; இன்னும்,
மனோவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நாம் வீற்றிருக்கும் இம்மாதிரியான இன்னபிற
அமைப்புமுறைகள் அனைத்துமே அல்லாஹ்வை விட்டும் அல்லாஹ்வின் தூதரை (ஸல்) விட்டும் நம்மை
இடம்பெயர்க்கச் செய்யும் முயற்சியிலே மிகவும் உன்னிப்பாக செயலாற்றிக்கொண்டிருக்கின்றன.
இவற்றினூடே தெரியப்படுத்த முற்படும் ஏறக்குறைய அனைத்து
விடயங்களுமே நமக்கும் அல்லாஹ்வால் நமக்கு வழங்கப்பட்டுள்ள பொருப்புகளுக்கும் மத்தியில்
பேரிடைவெளியொன்றை உருவாக்குவதன் நோக்கிலே கணக்கீடு செய்யப்பட்டும், உன்னிப்பாக திருத்தங்கள்
செய்யப்பட்டும் வருகின்றன. இதற்குரிய பிரதான முன்னுதாரணமானது, மக்கா-மதீனாவை ஆட்சி
செய்யும் ஆட்சியாளர்களால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வின் தூதரது (ஸல்) ஒட்டுமொத்த
இருபத்திமூன்று ஆண்டுகால தெய்வீகப் பணியானது இப்பூமியில் மக்கா-மதீனாவை விடுவிப்பதையே
இலக்காகக் கொண்டிருந்தது; இதனை அவர்கள் (ஸல்) வெற்றிகரமாக நிறைவேற்றியும் முடித்தார்கள்.
எனினும், பல நூற்றாண்டுகளாகவே நாம் அல்லாஹ்வின் தூதருடைய இவ்வாழ்நாள் சாதனையின் மீது
கவனம் செலுத்தாதவர்களாக நம்முடைய ஒட்டுமொத்த ஆயுட்காலத்தையும் செலவிட்டு வருகிறோம்.
மக்கா-மதீனா மீண்டும் முஷ்ரிக்குகளாலும் காஃபிர்களாலும் ஆக்கிரமிக்கப்படுமானால்,
அதனை அவர்களிடமிருந்து விடுவித்து மீட்டெடுப்பதென்பது அத்தருணத்தில் நமது தலையாயக்
கடமையாகிவிடுகின்றது.
இத்தகைய
வரலாற்று நிகழ்வுகளைச் சுற்றிலும் நாம் முறைப்படுத்த முயலும் நம்முடைய வாழ்வானது,
“மக்கா நமக்குறியது!” என்ற பேருண்மையை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது. எனினும், இன்று
நடைமுறையிலிருப்பது போன்று மக்கா நமக்குறியதல்ல எனும் இத்தகைய நிலையிலே நாம் என்ன செய்வது?
இஸ்லாம் அல்லாத; இஸ்லாத்திற்கெதிரான; இஸ்லாத்திற்குப் புறம்பான அந்தச் 'சவூதி அரேபியா'
இன்று முஸ்லிம்களுக்கே உரித்தானவொரு அவமானம் மட்டுமல்ல, மாறாக அது ஒட்டுமொத்த மனித
சமூகத்துக்கும் வாய்க்கப்பெற்றவொரு அவமானம்!!
சென்ற
வாரம் அவர்கள் சில முக்கிய விவகாரங்களைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உங்களில்
சிலருக்கு இத்தகவல் தெரிந்திருக்க வாய்பில்லை; இன்னும், மக்களுள் பெரும்பான்மையினருக்கு
இத்தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள், இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்மணியை பொதுச்
சதுக்கத்திலே கிடத்தி அவளது தலையை வெட்டி வீழ்த்தினார்கள். இதுபோன்ற செயல்களைச் செய்வதற்கு
எவ்வித தகுதியுமற்ற மக்களால் அரங்கேற்றப்பட்ட இக்காட்டுமிராண்டித்தனமான செயலின் பின்னணியில்
உள்ள துல்லியமான விவரங்கள் நமக்குத் தெரியவில்லை.
அவர்கள், அரேபியாவினுள் கடத்தல்காரர்களின் வலையமைப்புகள்
இருப்பதாகக் கூறுகின்றனர். "கடத்தல்காரர்கள்" என்று இவர்களால் மேற்கோள்காட்டப்படுபவர்கள்
பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, அநீதியிழைக்கப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர். இந்தியா அல்லது
பாகிஸ்தான் துணைக்கண்டத்திலிருந்தும், இலங்கை அல்லது இன்ன பிற ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும்தான்
இவர்கள் பெருவாரியாக வருகை புரிகின்றனர். இதுபோன்ற கடுமையான தண்டனைகளின் அமலாக்கத்திற்கும்
கூட இத்தகையவர்கள் மட்டுமே பிரத்தியேக தகுதி படைத்தவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.
அப்படியென்றால் அந்நிலப்பரப்பின் இளவரசர்களாக, மேட்டுக்குடிகளாக,
மன்னர்களாக இருக்கும் நீங்கள் பகாசுர குற்றச்செயல்களோடு தொடர்புடையவர்களாக இருக்க வில்லையா?
தங்களுக்கென ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொள்ளவோ, தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும்
பொருட்டு சட்ட வல்லுனர்களுடன் நீதிமன்றங்களில் ஆஜராகவோ இயலாத; நீதி விசாரணை மறுக்கப்படுகின்ற
ஏழை ஆசியர்களையும் ஆப்பிரிக்கர்களையும் குறிப்பாகத் தெரிவுசெய்து, அவர்கள் மீது நீதியை
அமல்படுத்தும் அளவிற்கு நீங்கள் சூட்டிகையாக நடந்துகொள்கிறீர்கள் அல்லது வலிமைமிக்கவர்களாக
இருக்கிறீர்கள்.
அதேநேரத்தில், நீலநிறக்கண்களையும் இளம் பொன்னிற
தோல்களையும் கொண்ட சில ஐரோப்பியரோ அல்லது அமெரிக்கரோ இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால்,
அவர்களது அரசாங்க தலையீட்டிற்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள். அரேபியாவினுள் பூட்ஸ்
காலுடன் உலாவரும் இவர்கள், அப்புனித பூமியினுள் போதைப் பொருட்கள் கடத்தியதாக இறுதியாக
நீங்கள் செய்தியறிந்தது எப்பொழுது? பொதுச் சதுக்கத்தில் வைத்து இவர்களுள் ஒருவருடைய
தலை இறுதியாக வெட்டி வீசப்பட்டது எப்பொழுது?
இதுதான் "சவூதி அரேபியா" என்ற அந்தப்
பரிகாச காவியம்!! அவர்களுள் சில நாவுகள் இப்பொழுது தங்களுக்குள் சிலரையே பற்பல வஞ்சக
நோக்கங்களுக்காக விமர்சிக்க முயன்றுகொண்டிருக்கின்றன. மன்னர் ஃபஹதோ அல்லது அப்துல்லாஹ்வோ
போர்க்குற்றங்களுக்காக உலக நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்படும் அந்த
நாள் வருமா?
இவர்கள்தாம் உலகின் அப்பகுதியிலே கடந்த மூன்று தசாப்தங்களாக
நடைபெற்று வந்த இரத்தம் தோய்ந்த யுத்தங்களின் பின்புலத்திலிருந்துகொண்டு நிதியளித்தவர்கள்.
உள்நாட்டு குடிமைப் போர்கள், வெளிநாட்டுப் போர்கள், பிராந்தியப் போர்கள், மதம்சார்ந்த
போர்கள், இனப்போர்கள், இத்யாதி! இவர்கள் போர்க்குற்றவாளிகள்!!
எனினும்,
முஸ்லிம்களின் வெளித்தோற்றத்தையும் காஃபிர்கள் அல்லது முனாஃபிக்குகளின்
இதயத்தையும் பெற்றிருக்கும் அத்தகைய ஆத்மாக்கள், தனிநபர்களிடத்தில் நிகழ்வுகளை இதுபோன்று
அல்லாஹ்வின் ஒளியில் பார்ப்பதற்கோ, இதே நோக்கில் தங்களது பார்வைகளைச் செலுத்துவதற்கோ
தேவையான துணிச்சல் இல்லை; உளவுறுதியில்லை. ஏனெனில், குர்'ஆனை அவர்கள் தன்னுணர்வற்ற
மயக்க மனநிலையுடன் வாசிக்கின்றனர்; செயலிழந்த இதயத்துடன் அதனை உச்சாடனம் செய்கின்றனர்!!
குறிப்புகள்:
1. "அல்லாஹ்வுடைய தூதரின்
(ஸல்) பின்பற்றாளர்கள் - நாம் தானா?!" (Followers of Allah’s Prophet -Are we?!) என்ற இந்த
ஜும்’ஆ உரை, அமெரிக்காவின் வாஷிங்டன் டி. சி இஸ்லாமிய மையத்திற்காக அப்பகுதி
முஸ்லிம்களால் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ இமாமாக நியமனம்
செய்யப்பட்ட முஹம்மது அல்-ஆஸி அவர்களால் அவ்விஸ்லாமிய மையத்திற்கு
வெளியே அமையப்பெற்றுள்ள சாலையோர நடைமேடையில் வைத்து 16-07-2004 அன்று நிகழ்த்தப்பட்டது.
இமாம் முஹம்மது அல்-ஆஸியின்
மேலதிக ஆங்கில ஃகுத்பாக்களுக்கு www.islamiccenterdc.com என்ற
வலைப்பக்கத்தினைப் பார்வையிடவும். (அவ்விஸ்லாமிய மையத்தின் உள்ளே பிரவேசிக்க இமாமவர்களுக்கு
அனுமதி மறுக்கப்பட்டதன் காரணத்தால், 1983-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரையில் ஏறக்குறைய
33 ஆண்டுகளாக இமாம் முஹம்மது அல்-ஆஸி அவர்கள் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கும் சந்தடிகளுக்கும்
மத்தியிலும் இச்சாலையோர நடைமேடையில் வைத்தே தனது ஜும்'ஆ தின சொற்பொழிவினை வழங்கி
வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது).
2. Green Card: பச்சை அட்டை - அமெரிக்காவை தங்களது நிரந்தர வாழிடமாக
அமைத்துக்கொள்ள அனுமதியளிக்கும் பொருட்டு அமெரிக்க குடியேற்றச் சேவை மூலம் வெளிநாட்டுப்
பிரஜைகளுக்கு வினியோகிக்கப்படும் உத்தியோகபூர்வ அட்டை.
3.
"இஷ்திஷ்ஹாதி" நடவடிக்கை - மேற்கத்தியர்களும்,
அவர்களது கைப்பாவை ஊடகங்களும், இன்னும்,
சில நவீன தேச-அரசுகளை பிரதிநிதித்துவப் படுத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் கைப்பாவை ஆட்சியாளர்களும்
இத்தகு நடவடிக்கைகளை 'தற்கொலைப் படைத் தாக்குதல்' என்பதாகச் சித்தரிப்பது வழக்கம்.
அதனோடு கூட, மேற்கத்திய சிந்தனைத் தாக்கத்தால் உந்தப்பட்ட சில 'முஸ்லிம் புத்திஜீவிகளும்',
'கீழைச் சிந்தனையாளர்கள்' என்றறியப்படுபவர்களும் கூட இதனை 'தற்கொலை நடவடிக்கை' என்றே
விமர்சித்து வருகின்றனர். இதிலே வியக்கத்தக்க விடயம் எதுவுமில்லை என்றாலும், விளக்கங்களை
வேண்டி நிற்கும் மையக்கரு விவகாரத்திற்குச் செல்லும் முன்னர் நடப்புநிலையின் யதார்த்தத்தை மேற்கோள்காட்டிவிடுவது - தலைப்பினைப்
பற்றிய நமது சுருக்கவடிவத்திற்கு - குறைந்தபட்சமேனும் ஏற்புடையதாக இருக்கும்.
இஷ்திஷ்ஹாதி" நடவடிக்கை
குறித்த தெளிவான, துல்லியமான புரிதலைப் பெற்றிருக்க வேண்டிய தேவை இக்காலச் சூழலில் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும்
ஏற்பட்டிருக்கிறது. இத்தகு தாக்குதல்கள் குறித்த துல்லியமான
புரிதலை நோக்கிய முஸ்லிம்களின் அறிவுப்பயணத்தில், அவ்வகைத் தாக்குதல்கள் நடைபெறும் சூழமைவினைப் பகுப்பாய்வு செய்ய வேண்டியது
ஒவ்வொரு பற்றுறுதி கொண்ட முஸ்லிமினதும் இன்றியமையாத
கடமையாகும். இதுபோன்ற பகுப்பாய்வுகள், மீளாய்வுகளின் துணை கொண்டு மட்டுமே நம்மால் நடந்தேறிவிட்ட தாக்குதல்களின் சட்டப்பூர்வ
தன்மையினைக் குறித்த துல்லிமான கண்டடைவிற்கு வந்து
சேர முடியும்.
ஏனெனில்
சில சமகால தக்ஃபீரி குழுக்கள், ஜிஹாதின் பெயரிலும் 'இஸ்லாமிய அரசின்'
பெயரிலும் அரங்கேற்றி வரும் வரம்புமீறிய
வன்முறைச் செயல்பாடுகளுக்கு இஸ்லாத்தில் எவ்வித சட்டப்பூர்வ தன்மையோ முகாந்திரமோ இல்லை.
அவர்களது
அத்தகைய 'போர் உத்திகள்' இந்த "இஷ்திஷ்ஹாதி" நடவடிக்கையின் வகைப்பாடுகளைச்
சார்ந்ததே என்ற சிலரது அனுமானங்களை நாம்
அங்கீகரிக்கலாமா அல்லது குறைந்தபட்சம் அதனை 'இஸ்லாம்-சார்ந்த' ஒன்றாகவேனும் ஏற்றுக்கொள்ளலாமா என்றால் நிச்சயமாகக்
கூடாது. ஏன் கூடாது என்ற கேள்வியினை முன்வைக்கும்
முன்னர், அவ்வகைத் தாக்குதல்களை அவர்கள் யார் மீது தொடுக்கிறார்கள்? எவ்விடங்களில் தொடுக்கிறார்கள்? ஏன் தொடுக்கிறார்கள்? எவ்வழிமுறைகளில்
அத்தகைய தாக்குதல்களை அரங்கேற்றுகிறார்கள்?
அத்தகைய தாக்குதல்களுக்கு குர்ஆன், சுன்னாஹ், சீறாவிலே ஏதேனும் முன்னுதாரணங்களோ, வழிகாட்டுதல்களோ, சூசகங்களோ
அல்லது ஏதேனும் அறம்சார்ந்த நியாயப்பாடுகளோ காணக்கிடைக்கின்றனவா?
அத்தகைய
தாக்குதல்களைக் குறித்த அறம்சார்ந்த ஏற்புத்தன்மைக்காக அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் என்னென்ன?இவ்விவகாரம் பற்றிய அவர்களது
அறிவின் ஆதாரங்கள், அவ்வாதாரங்களின் பின்புலமும் நம்பகத்தன்மையும் எத்தகையது?
எனும் இதுபோன்ற கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிவதென்பது இவ்விவகாரம் குறித்த தெளிந்த புரிதலை நோக்கிய நமது அறிவுப்பயணத்தில்
ஓர் இன்றியமையாத முன்தேவையாக இருக்கிறது. இவர்களது
இழிச் செயல்களனைத்தையும் இஸ்லாம் அங்கீகரிக்கிறதா இல்லையா என்ற கேள்வி ஒரு புறமிருக்க, இவர்களது இத்தகைய மாபாதகச் செயல்களுக்கெதிராக
இஸ்லாத்திலே - குர்ஆன், சுன்னாஹ்,
சீறாவிலிருந்து எடுத்தியம்பப்பட்ட - பல்வேறு சான்றுகளும், எச்சரிக்கைகள், கண்டனங்களை
உணர்த்தி நிற்கும் பல்வேறு வசனங்களும் அபரிமிதமாகக்
காணக்கிடைக்கின்றன.
ஆக, இஸ்லாமிய எண்ணக்கருக்களுள் ஒன்றான "ஜிஹாத்" என்னும்
அவ்விசாலமான செயல்முறைத் திட்டத்தின் பரப்பெல்லைக்குள்
வந்துவிடும் இந்த "இஷ்திஷ்ஹாதி" நடவடிக்கைக்கும், சமகால தக்ஃபீரி
குழுக்களுள் சில, ஆங்காங்கே
அவ்வப்போது அரங்கேற்றி வரும் வன்முறைச் சம்பவங்களுக்கும் எவ்வித செய்முறைத் தொடர்புமில்லை. இஸ்லாத்தில், அத்தகைய நடவடிக்கைகளை
அங்கீகரிக்கும் படியான எவ்வித அறம்சார்ந்த தர்க்க
அறிவும் கிடையாது. எனினும், இத்தலைப்பினைப் பற்றிய நீண்ட, ஆழிய விவாதத்திற்கான களம்
இதுவல்ல என்ற ரீதியிலும், இவ்விவகாரத்தைப்
பற்றிய கலந்துரையாடலுக்கு இது முற்றிலும் ஒவ்வாதவொரு சூழமைவு என்ற ரீதியிலும் மேலே கூறப்பட்டுள்ளது வெறுமனே இவ்விவகாரத்தைப்
பொருத்த எனது மேம்போக்கான, சுருக்கமான கருத்துதான்
என்பதனை தெளிவுபடுத்த விளைகிறேன். அல்லாஹ் அறிந்தவன்!
No comments:
Post a Comment